Tue. May 7th, 2024

ஆன்லைன் மூலம் இடம்பெற்ற கற்பித்தல் நடவடிக்கை முழுமையான தோல்வி- ஆசிரியர் சங்கம்

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது ஆன்லைன் மூலம் இடம்பெற்ற கற்பித்தல் நடவடிக்கை முழுமையான தோல்வி அடைந்தது , ஏனெனில் இது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (சி.டி.எஸ்.யூ) தெரிவித்துள்ளது.

சி.டி.எஸ்.யு பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க கருத் து தெரிவிக்கும் பொழுது , பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தற்போதைய உபகரணங்களை பயன்படுத்திய அனுபவம் மிகக்குறைவு என்றும் அவர் தெரிவித்தார்

“நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மொபைல் சிக்னல் வலிமை மோசமாக உள்ளது. தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் இன்டர்நெட் க்கான பணமும் மிகவும் அதிகமாக இருந்ததுடன் அது போதுமானதாக இல்லை, ”என்று அவர் கூறினார்.

“கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்களும் , மேற்கு மாகாணத்தில் 50 சதவிகித மக்ளும்(WP), பிற மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்ளும் இணைய பாவனையை கொண்டுள்ளனர், மீதமுள்ள மக்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

இந்த தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி சேனல்களில் பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வி தளமாகும் என்றார்.

மேலும், ஆன்லைன் கல்வி மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவர்கள் மொபைல் போன்கள், கணினிகள் அதிகம் பயன்படுத்துவதற்கு அடிமையாகிவிட்டனர் என்றும் திரு ஜெயசிங்க மேலும் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்