Wed. May 8th, 2024

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாக மாறக்கூடும், WHO எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அமெரிக்கா உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய மையமாக மாறக்கூடும் என்று டொனால்ட் டிரம்ப் நாட்டை மீண்டும் வணிகத்திற்காக திறப்பது பற்றி பேசியபோது WHO ( உலக சுகாதார அமைப்பு ) ஆல் எச்சரிக்கப்படுள்ளது

“நாங்கள் இப்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ ஆல் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை காண்கிறோம். எனவே தொற்றுநோயின் மையமாக மாறுவதற்கன ஆற்றல் உள்ளது ”என்று WHO செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறினார்.

இதுவரை, அமெரிக்காவில் 46,450 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 593 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா முழுவதும் இதுவரை 46,369 நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முன்னணி ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான முக்கியமான சுகாதாரப் பொருட்கள் பெறுவது கடினம் என்று டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
அவரின் ட்வீட்டர் பக்கத்தில் “முகமூடிகள் மற்றும் வென்டிலேட்டர்களுக்கான கேள்வி உலக சந்தையில் அதிகரித்துள்ளது. உபகரணங்கள் பெற மாநிலங்களுக்கு நாங்கள் உதவுகிறோம், ஆனால் அது எளிதானது அல்ல. ” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதிகமான அமெரிக்க ஆளுநர்கள் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு வற்புறுத்துகையில், டிரம்ப் திங்கள்கிழமை இரவு நெருக்கடியைக் குறைக்க புதிய கருத்தை வெளியிடடார். வரவிருக்கும் வாரங்களில் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான வழிகளை பரிசீலித்து வருவதாகவும், தொற்றுநோய் நீண்டகால நிதி பிரச்சினையாக மாறுவதைத் தவிர்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார். இது மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை நீடிக்காது, என்றார்.

“எங்கள் நாடு மூடப்படுவதற்கு கட்டப்படவில்லை, இது இதற்காக கட்டப்பட்ட நாடு அல்ல”என்று கூறிய டிரம்ப் மிக விரைவில் நாட்டை பொருளாதாரத்துக்காக திறக்கபோவதாக கூறியுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்