Fri. May 3rd, 2024

அச்சுவேலியில் தம்பதியினரின் வளர்ப்பு நாயை கடத்தி 25, 000 ரூபாய் பணம் பறித்த இளைஞர்கள்

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்திச் சென்ற பின்னர் 25,000 ரூபா பணத்தை பெற்ற பின்னர் நாயை உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அச்சுவேலிப் பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப்பேறு  கிடைக்கவில்லை. இந்த நிலையை சமாளிப்பதற்காக அவர்கள் பொமேரியன் இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய் விட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போய்விட்டது. அதனை அவர்கள்  அயலில்தேடி அலைந்து கொண்டு மனமுடைந்து இருந்தார்கள். காணாமல் போன அன்றைய தினம் மாலை அவர்கள் வீட்டிற்கு சற்று தொலைவில் வசிக்கும் இளைஞர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து உங்கள் நாய் வேணும் என்றால் 25,000 ரூபாய் தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். தம்பதியினரும் அதற்கு சம்மதித்து அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து உள்ளனர்.  பணத்தினைப் பெற்றவர்கள் அரைமணிநேரத்தில் நாயைக் கொண்டு வந்து அவர்களிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். தம்மிடம் பணம் பெறும் நோக்குடனேயே  நாயை தனது வீட்டிலிருந்து பிடித்துச் சென்று பின்னர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு நாயை தம்மிடம் ஒப்படைத்து உள்ளார் என சந்தேகிக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்