Sat. May 11th, 2024

தேசிய மட்ட 400 மீற்ரர்  தடைதாண்டலில் நசாத்கான் வெண்கலம் 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட 400 மீற்ரர் தடைதாண்டலில் மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ந.மு.நசாத்கான் வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று  நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான 400 மீற்ரர் தடைதாண்டலில் மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ந.மு.நசாத்கான் 54.3 செக்கன்களில் ஓடி வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்