Sat. Apr 27th, 2024

வலயமட்ட பெண்கள் துடுப்பாட்டத்தில் கரவெட்டி விக்னேஸ்வரா சாம்பியன்

வலயமட்ட பெண்கள் துடுப்பாட்டத்தில் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆனது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி 2020 ஆம் ஆண்டுக்கான வடமராட்சி வலயமட்ட பெண்கள் துடுப்பாட்டத்தின்  இறுதியாட்டம் கரணவாய் கொலின்ஸ்மைதானத்தில்  கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற விக்னேஸ்வரா கல்லூரி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி சார்பில் அதிகபட்சமாக விசாலினி 10 காவியா 7.ஓட்டங்களை பெற்று 47 ஓட்டங்களை சேகரித்து கொண்டனர். விக்னேஸ்வரா கல்லூரி சார்பில் மிக்சனா 3 மது சியாசாமினா தர்ஷிகா சாமானா மதிய தர்சிகா தலா ஒரு இலக்குகளை கைப்பற்றினர் 48 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய விக்னேஸ்வரா கல்லூரி ரெண்டு பந்துப் பரிமாற்றங்கள் மீதம் இருக்கையில் இலக்குஇழப்பின்றி வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று வடமராட்சி வலயமட்ட சம்பியனானது. துடுப்பாட்டத்தில் ஆரம்பத்துடுப்பாட்ட வீராங்கனைகள் சாதுரிய 30 ஓட்டங்களையும் நிருத்திக் 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்