Thu. May 23rd, 2024

மாறி மாறி ஊழல் வாதிகளை காப்பாற்றும் அரசுகள் – சுனில் ஹந்­துன்­னெத்தி

போர் முடி­வுக்கு வந்து ஒரு தசாப்த கால­மா­கியும் இந்த நாட்­டினைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­ய­வில்லை. இதற்கு காரணம் ஊழல். மஹிந்த ஆட்­சியில் ஊழல் நடந்தால் அதனை ஐக்­கிய தேசியக் கடசி ரணில் அரசு காப்­பாற்றும். ரணில் ஆட்­சியில் ஊழல் நடந்தால் மஹிந்த அரசு ரணிலை காப்­பாற்றும். இவ்­வாறு மாறி மாறி ஆதரவு வழங்கி ஊழல்­வா­தி­களே நாட்­டினை ஆடசி செய்து வரு­கின்­றனர் என ஜே.வி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி யாழ்ப்பாணத்தில் தெரி­வித்தார்.

வடக்கில் போரில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போரா­டு­கின்­ற அதேவேளை தென்­னி­லங்­கையில் போரில் அங்­க­வீ­ன­மான இரா­ணு­வத்­தினர் ஓய்­வூ­தியதுக்காக போரா­டு­கின்­றனர். அப்­ப­டி­யானால் இலங்­கையில் போர் முடி­வ­டைந்த பின்னர் ஆட்சி நடத்­திய அனை­வரும் வெட்க்கித் தலை குனிய வேண்டும்

நாட்­டினை ஆண்டு வரும் ஆட­சி­யா­ளர்கள் மக்கள் மத்­தியில் மத­வா­தத்­தையும் இன­வா­தத்­தையுமே வளர்த்து வரு­கின்­றனர். கடந்த 2009 ஆண்டு உள்­நாட்டு போர் முடி­வ­டைந்­த பின்னர் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்­டினை ஆட்சி செய்தார்.அப்­போது வடக்கில் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­காக யாரும் போராட முன்வராத நிலையில் எமது கட்­சி­யி­னரே முதன்­மு­தலில் வடக்கில் காணாமல் ஆக்­கப்­ப­ட­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும் என போராட்டம் நடத்­தினர்.

அப்­போது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷவின் அடி­யாட்­க­ளினால் எமது கட­சியின் செயற்­பாட்­டா­ளர்கள் மீது கொடூ­ர­மான தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றதினால் எமது உறுப்பினர்கள் பலர் காயமடைந்து இருந்தனர்

தற்­போ­தைய அரசு மஹிந்த காலத்தில் நடை­பெற்ற சில ஊழல் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தாலும் அது வெறும் கண்­து­டைப்பாக மட்டுமே இருக்கிறது . மஹிந்த காலத்து ஊழல்­க­ளுக்கு போதிய ஆதா­ரங்கள் இருந்தும் ரணில் மஹிந்­த­வையும் அவ­ரது குடும்­பத்­தையும் காப்­பாற்றி வரு­கின்­றனர்.

இனி­வரும் காலங்­களில் மஹிந்த குடும்பம் ஆட்­சிக்கு வந்தால் கூட ரணிலின் ஆட்­சியில் நடை­பெற்ற மத்­திய வங்கி பிணை முறி மோசடி தொடர்­பாக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட மாட்­டாது. இவ்­வா­றான ஊழல்­வா­தி­களை மக்கள் ஒதுக்கி புதிய மக்கள் ஆட்­சி­யென்றை அமைக்க எமது கட்­சிக்கு ஆத­ர­வினை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்