Sun. Jun 16th, 2024

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது, நீர்கொழும்பு பொலிஸார் அதிரடி

வத்தளையில் கல்யாண மாவத்தையில் சட்டவிரோத போலி ஆவணங்களை தயாரித்த அச்சகம் மீது நீர்கொழும்பு சிறப்பு குற்ற விசாரணை பிரிவு சோதனை நடத்தியுள்ளது.

அந்த இடத்தில் இருந்த மூன்று சந்தேக நபர்களும் இதன் பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதலின் பொழுது 18 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள், பல்வேறு அரசாங்க கடித தலைப்புகள் மற்றும் போலி ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வத்தளை, கணேமுல்லா மற்றும் மறதங்கடவல பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர் .

இவர்கள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்