Sun. Jun 16th, 2024

கல்வி, அறிவுக்கானது மட்டுமல்ல ஒழுக்கத்தையும், நாகரீகத்தையும் கற்றுத்தருவது   –    உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் 

கல்வியின் மூலம் அறிவினை மட்டும் பெற்றுக்கொள்ளவதல்ல ஒழுக்கத்தையும் நாகரீகத்தையும் கற்றுதருவது என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் கல்விக்கு குரல் கொடுப்போம் கற்றலை மேம்படுத்துவோம் என்னும் திட்டத்தின் கீழ் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களை தெரிவு செய்து கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு ஆனைக்கோட்டை முள்ளிபிதேசத்தில் கலைஒளி சனசமூகநிலையத்தில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய சங்கத்தின் தலைவர்  மேலும் தனதுரையில் இன்று கல்வி பரீட்சை, மையகல்வியாக மாறியதனால் ஒழுக்கம், நாகரீகம்,  கல்வி, விழுமியத்தில் இருந்து விலகிசெல்கின்றது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் காணப்படும் பிணைப்பு வலுவற்றதாக உருவாகியுள்ளது. இதனை பெற்றோர் சீர்செய்ய முன்வரவேண்டும். இல்லையேல் கல்விமட்டுமல்ல ஒழுக்கம், நாகரீகம், சமூகவிழுமியம் எல்லாமே சிதைக்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டு கிராம மட்டத்தில்  எழுத்தறிவு, வாசிப்பு, அறிவு வீதத்தினை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் சமூக நீரோட்டத்தில் ஒடமுடியும் இல்லாவிட்டால் கிராமம் கிராமமாகவே காணப்படும் என தனதுரையை நிறைவு செய்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்