Fri. May 10th, 2024

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற ‘மன்னல்’ நூல் வெளியீட்டு விழா

2020ஆம் ஆண்டுக்கான கலைஞர் ஒன்று கூடல் நிகழ்வு மற்றும் ‘மன்னல்’ நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது  மன்னார்   பிரதேச செயலாளாரும் மன்னார் பிரதேச  கலாச்சார பேரவையின் தலைவருமான எஸ்.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலுள்ள கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் வருடா வருடம் வட மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் தினைக்களத்தின் நிதி அனுசரனையுடன் வெளியிடப்படும் ‘மன்னல்’ நூலானது வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , திட்டமிடல் பணிப்பாளர் , கணக்காளர் உற்பட மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலாமன்ற பிரதி நிதிகள் , கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், மாதர் ஒன்றிய பிரதி நிதிகள், பல் துறை சார் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
 அதன் பின்னர்  இடம் பெற்ற கலைஞர் ஒன்று கூடலின் போது 2020 ஆம் ஆண்டுக்கான புதிய கலாச்சார பேரவை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ள காலச்சார விழாவில் வெளியிடப்படவுள்ள மலர் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
 அதே நேரத்தில் இவ்வருடம் இடம்பெற உள்ள கலாச்சார நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்