Thu. May 9th, 2024

பருத்தித்துறையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்புளைப் பேணியோர் சுயதனிமைப்படுத்தல்

பருத்தித்துறையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்புளைப் பேணியோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது நாடடின் சகல பகுதிகளிலும் இடம்பெறுகிறது.

தனிமைப்படுத்தப்பட்டோர் 14 நாட்கள் குறித்தொதுக்கப்பட்ட தமது இடங்களில் கண்காணிக்கப்படுவர்.

இக்காலத்தில் உறவினர் நண்பர்கள் இவ்வீடுகளுக்கள் நுளைய முடியாது. மீறினால் அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

உலர் உணவு மற்றும் தேவைகளைப்பூர்த்தி செய்ய விரும்புவோர் கிராம அலுவலருடன் தொடர்பு கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர்கள் மக்கள் கூடும் இட்களில் நடமாடுவதை தவிர்ப்பதோடு முகக்கவசத்தை சரியான முறையில் அணிதல்,சமூக இடைவெளி பேணுதல், கைகளைக்கழுவுதல் என்பவற்றை கடைப்பிடித்தல் வேண்டும்.

நோய் அறிகுறிகள் தென்படின் தங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கவேண்டும்

தனிமைப்படுத்தல் சட்டங்ளைமீறும் எவருக்கும் எதிராக வழக்குதொடர்ந்தால் 10,000/= அபராதமும் 6 மாத சிறையும் நீதிமன்றால் விதிக்க முடியும்.

கட்டளைகளுக்கு கீழ்ப்படியாது ஆபத்து ஏற்படக்கூடியவாறு செயற்படு்ம் பகுதிகள் பொருத்தமான அனுமதிகள் பெறப்பட்டு முடக்கப்படும்.

தனிமைப்படுத்துதலுக்கு உட்பட்டவர்கள் பொது.சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினரின் கண்காணிப்புக்கு உட்பட்டிருப்பார்கள்.

பொதுமக்களான நீங்கள் தேவையற்றவிதத்தில் கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் நடாத்தி மக்களை ஒன்றுகூட்டுவதை தவிர்கவும்.

ஒத்துழைப்புடனும்விழிப்புணர்வுடனும்செயற்பட்டால் சமூகத்தைப் பாதுகாக்கலாம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்