Sat. May 11th, 2024

தேசிய மட்ட பளுதூக்கல் ஆஷிகா 3 புதிய சாதனைகள்

 

அகில இலங்கை தேசிய மட்ட பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த விஜயபாஸ்கர் ஆஷிகா 3 புதிய சாதனைகளைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
அகில இலங்கை தேசிய மட்ட திறந்த வயதுப் பிரிவினருக்கான  பெண்களிற்கான பளுதூக்கல் போட்டிகள் கொழும்பு டொறின்ரன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆஷிகா 64 கிலோ எடைப் பிரிவில்  சினெச் முறையில் 77 கிலோ பளுவைத் தூக்கியும்  மற்றும் கிளின் அன் ஜக் முறையில் 98  பளுவைத் தூக்கியும் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் 175 கிலோ பளுவைத் தூக்கியும் 3 புதிய சாதனைகளை பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
71 கிலோ எடைப் பிரிவில் கு.றெஜீனா சினெச் முறையில் 58 பளுவையும் கிளின் அன் ஜக் முறையில் 70 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 128 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப்  பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்