Sun. May 12th, 2024

தேசிய மட்ட பளுதூக்கலில்  வயாவிளான் மத்திய கல்லூரிக்கு  தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்கள்

தேசிய மட்ட பளுதூக்கலி
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் வசாவிளான் மத்திய கல்லூரி ஒரு தங்கம் இரண்டு வெள்ளி பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களை கைப்பற்றினர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
வயாவிளான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 20 வயதிற்குட்பட்ட பிரிவில் 55 கிலோ எடைப் பிரிவில்  நிதுர்சனா 125 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் 49 கிலோ நிறைப் பிரிவில் அபிசாக் 106 தூக்கி வெள்ளி பதக்கத்தையும்,  71 கிலோ நிறைப் பிரிவில்  தனுசியா 120 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்