Sun. May 12th, 2024

தேசிய மட்ட தடகளத் தொடரில் அத்தியார் இந்துக் கல்லூரி மூன்று வெள்ளிப் பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விசேட தேவையுடையோருக்கான தடகளத் தொடரில் அத்தியார் இந்துக் கல்லூரி மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு நான்காமிடத்தையும் பெற்றனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விசேட தேவையுடையோருக்கான  தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 18 வயதிற்குட்பட்ட 100 மீற்ரர் ஓட்டத்தில்  தே.பிரதீபன் வெள்ளிப் பதக்கத்தையும்,
16 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான பறக்கும் தட்டெறிதலில்  சி.டிஷாந் வெள்ளிப் பதக்கத்தையும்,
12 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான சமநிலை ஓட்டத்தில்  ஸ்ரீ.சிவரூபன் வெள்ளிப் பதக்கத்தையும்
அதே வயதிற்குட்பட்ட பிரிவில் 100 மீற்ரர் ஓட்டத்தில்  சி.சளிஸ்குமார் நான்காமிடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்