Fri. Apr 26th, 2024

கரியமில வாயுவைவிட (CO2) பூமியை 23000 மடங்கு வெப்பமாக்கும் அதி பயங்கரமான வாயு..

இதுவரை மனிதகுலத்திற்கு தெரிந்த மிக சக்திவாய்ந்த பச்சை வீட்டு விளைவு வாயுவின் (கிரீன்ஹவுஸ் வாயு), வெளியீடு சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது, என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வாயுவை சல்பர் ஹெக்ஸோபுளோரைட் , அல்லது எஸ்.எஃப் 6(SF6) என்று அழைப்பார்கள். மின்சார துறையில் குறுகிய சுற்றுகள் ( short circuit ) மற்றும் விபத்துக்களைத் தடுக்க பரவலாக பஇது பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயுவை பற்றி இங்கிலாந்திலோ உலகின் மற்றைய பகுதிகளிலோ பெரிதாக அறியப்படாமல் உள்ளது.
இந்த வாயுவின் வெளியீடானது சுமாராக 1.3 மில்லியன் கார்களினால் வெளியிடப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் விளைவுக்கு சமமானதாகும்.

இந்த வாயுவின் வெளியீடானது மீள் சுழற்சி சக்தியின் ( renewable energy ) உற்பத்தியுடன் அதிகரித்து செல்கின்றது என்பது கவலையான விடயமாகவுள்ளது. இந்தவாயுவானது இதுவரை அறியபட்ட எல்லா வாயுக்களை காட்டிலும் அதிக புவி வெப்பமடைதல் திறனை கொண்டுள்ளது
. இது கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடை -CO2) விட 23,500 மடங்கு அதிக வெப்பமயமாதல் திறனை கொண்டுள்ளது..
ஒரு கிலோகிராம் SF6 இன் தாக்கமானது சுமாராக 24 பேர் லண்டனில் இருந்து நியூயார்க் சென்றுவரும் பொழுது ஏற்படும் புவி வெப்பமாதலுக்கு சமமானதாகும்

இது வாயுவானது வளிமண்டலத்தில் குறைந்தது 1,000 ஆண்டுகளாக பூமியை வெப்பமாக்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்