Sat. May 11th, 2024

இறுதிவரை திக் திக் ஆட்டம் நவிண்டில் கலைமதி அணி சம்பியன்

55வது படைப் பிரிவினரால் அழைக்கப்பட்ட வடமராட்சி அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரில் நவிண்டில் கலைமதி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்
இளைஞர்களிற்கிடையே நல்லுறவினை ஏற்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 28 அணிகள் பங்குபற்றிய உதைபந்தாட்டத்தொடர் ஒன்றை இராணுவம் நடாத்தி வந்தது. அதன் இறுதிப்போட்டியனது நேற்று புதன்கிழமை யாழ்  துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இறுதிப் போட்டியில் அல்வாய் நண்பர்கள் அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இதனால் பல நிமிடங்கள் இரு அணிகளாலும் கோல் எதனையும் போட முடியவில்லை. இருப்பினும் 38 வது நிமிடத்தில் அல்வாய் நண்பர்கள் அணி வீரர் ஒரு கோலைப் பதிவு செய்ய 43 வது நிமிடத்தில் நவிண்டில் கலைமதி அணி வீரர் ஒரு கோலைப் போட்டு கோல்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினார். இதனால் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் சமநிலை வகித்தனர்.
இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் 55வது கலைமதி அணி வீரர் ஒரு கோலைப் போட 65வது நிமிடத்தில் அல்வாய் நண்பர்கள் அணி வீரர் ஒரு கோலைப் போட்டு பதிலடி கொடுத்தார். 78வது நிமிடத்தில் கலைமதி கலைமதி அணி வீரர் ஒரு கோலைப் போட 88வது நிமிடத்தில் அல்வாய் நண்பர்கள் அணி வீரர் மீண்டும் பதிலடி கொடுத்து கோல்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினர். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நவிண்டில் கலைமதி அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். ஆட்ட நாயகனாக அல்வாய் நண்பர்கள் அணி வீரர் ஜோன்கெனடி, சிறந்த கோல் காப்பாளராக நவிண்டில் கலைமதி அணி வீரர் ரதீசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்