Sun. Apr 12th, 2026

தைமாத பலன்- கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமான கிரகங்கள் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கல்யாண வாழ்க்கையில் கவலைகள் நீங்கி குதூகலம் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது. தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சூரியன், சனி, புதன், ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், அஷ்டம ஸ்தானத்தில் குரு என இந்த மாதம் கிரகங்கள் பயணம் செய்கின்றன.
கணவன் மனைவி சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு தை மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. காரணம் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் இணைந்திருக்கின்றனர். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் அந்நியோன்னியமும் அதிகரிக்கும். ஆண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நல்ல மனநிலையில் இருப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடுவீர்கள்.
பண வரவு அதிகரிக்கும் நோய்கள் நீங்கும் உடலில் உற்சாகம் அதிகரிக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும். பெரிய அளவில் யாரை நம்பியும் பண முதலீடுகளை செய்யாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும் வரவே வராது என்று நினைத்த பணமும் கைக்கு வந்து சேரும். மூத்தவர்களுக்கு இது நல்ல மாதம் உடல் நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.
வேலையில் கவனம் தேவை சுக்கிரன் வக்ர நிவர்த்தி ஆவது ஆறுதலான விசயம். மாத பிற்பகுதியில் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன உரசல்கள் வரலாம் சகோதர சகோதரிகளிடையே பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உறவுகளுக்குள் பிரச்சினை வராமல் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. யாருக்கோ நல்லது செய்யப்போய் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வேலையை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம்.
முயற்சிகளுக்கு வெற்றி புதன் வக்ரமடைவதால் பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஒரு மாதம் காத்திருப்பது நல்லது. பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் கணவன் மனைவி இடையே மாத பிற்பகுதியில் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சுக்கிரன் செவ்வாய் ஆறாம் வீட்டில் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது நன்மையைத் தரும். குல தெய்வ தரிசனம் குடும்பத்தில் நன்மையை அதிகரிக்கும். மேலும் நன்மைகள் அதிகரிக்க உங்கள் ராசிநாதன் சந்திரனை மூன்றாம் பிறை நாளில் தரிசிக்க நன்மைகள் நடைபெறும்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed