Sun. Jun 2nd, 2024

கட‌ற்கரை கரப்பந்தாட்டம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 4 தடவையாகவும் சம்பியனாகி சாதிப்பு

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து மன்னார் தட்சணா மருதமடு மகா வித்தியாலய அணி மோதியது.  ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 25:15, 25:18 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி தொடர்ச்சியாக 4 தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 3ம் இடத்தை வவுனியா ஸ்ரீசுமண மகா வித்தியாலய அணி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்