Sat. Jun 1st, 2024

பருத்தித்துறை வொலிபோல் கலையரசி சம்பியன்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான வொலிபோல் தொடரில் தொண்டைமானாறு கலையரசி விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் இன்று திங்கட்கிழமை சிவானந்தா விளையாட்டுக் கழக  மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணியை எதிர்த்து தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழக அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய தொண்டைமானாறு கலையரசி அணி 25:17, 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்