Sat. Jun 1st, 2024

வயோதிபர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

தென்மராட்சி கைதடி குமரநகர் பகுதியில் இன்று(15) மதியம் வயோதிபர் ஒருவர்
கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.

தமது வீட்டு கிணற்றை இறைத்து சுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக வழுக்குப்பட்டே கிணற்றினுள் விழுந்துள்ளார் எனவும் அவ்வேளை வீட்டிலிருப்பவர்கள் தோட்டத்திற்கு சென்றிருந்தனர் எனவும் தெரியவருகிறது.

கைதடி குமரநகர் பகுதியினைச் சேர்ந்த ஆறுமுகம் பொன்னம்பலம் (வயது 65) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த வயோதிபர் திருமணமாகாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்