Mon. May 20th, 2024

60 வயதிற்கு மேல் கடமையாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்க வேண்டும்

65 வயதுவரை சேவையாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக தீர்மானிக்கப்பட்டது. இதனால் குறித்த பாடசாலைகளில் 7 வருடங்கள் கடந்த நிலைமையிலும் ஆசிரியர்கள் 55 வயதைக் கடந்திருந்தால் அவர்களுக்கான இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டு அந்த பாடசாலைகளிலேயே ஓய்வுபெறும் நிலைக்கான சலுகைகள் வழங்கப்பட்டது. இதனை ஆசிரிய சமூகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போது ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 65ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு பல ஆசிரியர்கள் தமது ஓய்வுக் காலத்தை அதிகரடத்துள்ளனர். அவர்களால் தமது ஆசிய சேவையை மாணவர்களுக்கு திறம்பட நடாத்த முடியும் என்ற நம்பிக்கையிலேயே தமது ஓய்வுக் காலத்தை அதிகரடத்துள்ளனர். இவ்வாறு அதிகரிக்கப்பட்ட ஓய்வு காலத்தால் குறித்த பாடசாலையில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாகவும் கடமையாற்றும் ஆசிரியர்களாக காணப்படுகின்றனர்.  இதனால் குறித்த பாடசாலைகளில் புதிய ஆசிரியர்கள் வருகை மற்றும் புதிய செயற்பாடுகள், சிந்தனைகள் என்பவைகள் மாற்றப்படாது சிரேஸ்ட ஆசிரியர்களுக்கான வழிகாட்டலிலேயே இடம்பெறவுள்ளது. அத்துடன் சிரேஸ்ட ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளிலும் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் வகுப்பறைக்குச் செல்லாது இருத்தல் மற்றும் இருந்தவாறே கற்பித்தல் பரீட்சை நிலையங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்தாமை மற்றும் பழைமையான விடயங்களை மாற்றி புதிய நடைமுறைகளைக் கொண்டு வருவதற்கு பின்னடிப்பு போன்ற குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  எனவே இதற்கு தீர்வாக தொடர்ந்தும் சேவையிலீடுபடுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களை அயல் பாடசாலைகளுக்காகவது மாற்றுவதனூடாக கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு புதிய ஆசிரியர்கள் நியமனம் ஓய்வூதிம் வழங்கல் போன்றவற்றை கருத்தில் கொண்டே இவர்களுக்கான வயதெல்லையை நீடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்