Sun. May 12th, 2024

50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கவலைக்கிடம்

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பலரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்து.
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 34 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்