Thu. May 16th, 2024

வடமராட்சியில் கண்காணிப்பு கமரா

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முன்மாதிரியான  செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.  கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்கான கலந்துரையாடல் இன்று கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் வீதி அதிகார சபையினர், மின்சார சபையினர்,  ரெலிக்கொம் நிறுவனத்தினர், பொலீஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமராட்சி பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயல்களான களவு, அனுமதியற்ற மாடு வெட்டுதல், மணல் கடத்தல், குப்பைகளை வீதியில் போடுதல் போன்ற பலவிதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் முகமாக கண்காணிப்பு கமரா பொருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடமராட்சி பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை குறைத்து மக்கள் நிம்மதியாக வீட்டில் நித்திரை கொள்ள வேண்டும்  என்றார்.  இதனடிப்படையில் வடமராட்சி பகுதியில் முக்கிய பல வீதிகளில் எதிர்வரும் கிழமைகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் முதன் முறையாக கரவெட்டி பிரதேச சபையால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்