Fri. May 17th, 2024

உணவு பாதுகாப்பு மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு பரிசோதனை

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பருத்தித்துறைப் பகுதியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இதன் போது உணவு தயாரிப்பு விநியோகத்தின் போது அடிப்படை சுகாதார விடயங்களை மீறுவோர் மீதும் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக வத்திருந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கொவிட் பதுகாப்பு நடைமுறைகளை மீறும் வர்த்தக நிலையங்களையும் எச்சரித்துள்ளதுடன் தொடர்ந்து மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சமூக இடைவெளி பேணாத மற்றும் முகக் கவசத்தை சரியாக அணியாத வர்த்தகர்கள், மற்றும் பொதுமக்கள் மீதும் அடுத்து  கொவிட் கட்டுப்பாடுகளை மீறி
பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் அவ்வாறான ஆபத்து சூழலை ஏற்படுத்தும் வர்த்தக நிலையங்களுக்கு எதிவரும் நாட்களில் சீல் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்