Fri. May 17th, 2024

வடமராட்சியில் இராணுவத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

கொவிட் கால இடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு விநியோகம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
கொவிட் கால இடரினால் பாதிக்கப்பட்டு நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு வர்த்தகர்களின் அனுசரணையுடன் பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் இராணுவத்தினரால் பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது.
பருத்தித்துறை, கற்கோவளம், வல்லிபுரம், துன்னாலை போன்ற பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பருத்தித்துறை இராணுவ தலைமையக பிரிகேடியர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர்  ஜென்சன் றொனால்ட், கிராம சேவகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அண்மையில் சென்று இந்த உலர் உணவுப் பொதிகளை கொவிட் சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை பேணியவாறு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்