Thu. May 16th, 2024

யாழ் மாவட்ட செயலகத்தில் தடுப்பூசி தொடர்பான கலந்துரையாடல்

அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று 29.05.2021 இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதமரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர், ஆளுநரின் செயலாளர் ,வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மற்றும் சுகாதார துறைசார் அதிகாரிகள்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைக் காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக அதிக தொற்றளர்கள் இணங்காணபட்ட பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தட்டுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை.

சங்கனை MOH – 1 G.S. Division
சாவகச்சேரி MOH – 16 G.S. Division
யாழ்ப்பாணம் MC MOH – 13 G.S. Division
காரைநகர் MOH – 1 G.S. Division
கரவெட்டி MOH – 5 G.S. Division
கோப்பாய் MOH – 4 G.S. Division
நல்லூர் MOH – 1 G.S. Division
பருத்தித்துறை MOH – 5 G.S. Division
சண்டிலிப்பாய் MOH – 10 G.S. Division
தெல்லிப்பழை MOH – 3 G.S. Division
வேலணை MOH – 2 G.S Division

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்