Fri. May 17th, 2024

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக மீண்டும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு கடந்த 6 மாத காலமாக சென்று மீண்டும் விடுமுறையை கழிக்க நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு பணியாற்றுமாறு சுகாதார துறையினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது மேற்படிப்பை பிற்போட்டுவிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இன்று முதல் அவர் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்