Thu. May 16th, 2024

நெல்லியடியில் அனுமதியின்றி அமைக்கப்படும் கட்ட வேலைகளை உடன் நிறுத்தக் கோரிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி அனுமதியின்றி அமைக்கப்படும் கட்டடத்தை தடுத்து நிறுத்துமாறு பிரதேச சபையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சபையின் அனுமதி பெறாமல் பொதுமகன் ஒருவரால் கட்டம் அமைத்தமை தொடர்பாக கரவெட்டி பிரதேச சபையால் குறித்த கட்டடத்தை அகற்றுமாறு பல தடவைகள் கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும்,  அதனைக் கருத்தில் கொள்ளாது தற்போதுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்தும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நெல்லியடி ராணி மில் ஒழுங்கைப் பகுதியில் ஒருவரால் பிரதேச சபையின் அனுமதி பெறாமல் கட்டம் அமைத்து வருவதாக பிரதேச சபையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து குறித்த பிரதேச சபை உத்தியோகத்தர்களால் கட்டடம் பார்வையிடப்பட்டு சட்டத்திற்கு முரணாக, பிரதேச சபை அனுமதியின்றி கட்டடம் அமைத்துள்ளமை தெரியவந்துள்ளதுள்ளதையடுத்து குறித்த நபருக்கு அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டத்தை அகற்றி பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று உரிய அறிவுறுத்தலுக்கு அமைய கட்டடத்தை அமைக்குமாறும் கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் குறித்த நபர் பிரதேச சபையின் அறிவித்தலை மீறி தொடர்ந்தும் தமது கட்டட வேலைகளை தொடர்வதாக பிரதேச சபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக பிரதேச சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்