Tue. May 14th, 2024

மனித உரிமைகள் கற்கை நெறி 100 பேருக்கு சான்றிதழ்

மனித உாிமைகள் கற்கை நெறியில் சித்தியடைந்த 100 பேருக்கு 
எதிா்வரும் 10ஆம்திகதி சிறப்புச்சான்றிதழ் யழில் வழங்கப்படும் அரசசாா்பற்ற இணையத் தலைவா் எஸ்.யுகேந்திரா முழு ஏற்பாடு செய்துள்ளார். 
 
 
யாழ் மாவட்ட  அரசசாா்பற்ற  நிறுவனத்தின் இணையத்தின்  ஊடாக மனித உாிமைகள் பற்றிய (Certificate in Human Rights Course)  சான்றிதழ் கற்கைநெறியில் கல்வி பயின்ற  100 பேருக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிா்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக இணையத்தின் தலைவா் எஸ்.யுகேந்திரா அறிவித்துள்ளாா்.
 
இணையவழி ஊடாக  இடம்பெற்ற இலவச மனித உாிமைகள் கற்கை நெறியில் மலையகம், கிழக்கு மற்றும் வடமாகாண மாணவா்கள் 170 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கு பற்றியிருந்தனா்.
 
இதில் முழுமையாக சிறப்பாக சகல வழிச்செயல்பாடுகளிலும் செயல்பட்ட 100 பேருக்கு  எதிா்வரும் 10 ஆம் திகதி யாழில் வைத்து சான்றிதழ் வழங்கப்பபடும். இக் கற்கை நெறியின் இணைப்பாளராக  செயல்பட்ட தே. தேவானந்  தலைமையில் சான்றிதழ் வழங்கும் பணி இடம்பெறும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்