Sun. May 19th, 2024

பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

பாடசாலைகளை ஒரு சில நாட்களில் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிக்காட்டல்களுக்கமைய பாடசாலைகளை ஆரம்பிக்க பலதரப்பினருடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடாளவிய ரீதியில் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் அதன் சுற்றுச் சூழல்களை சுத்தம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய 200க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளை உடனடியாக திறப்பதற்கு ஆசிரியர்களின் உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய முதல் கட்டமாக உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்