Sun. May 19th, 2024

அனைத்து தடுப்பூசிகளும் உரிய காலத்தில் வழங்கப்படும்- சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் தெரிவித்துள்ளார்

கரவெட்டிப் பிரதேசத்தில் கொவிட் 19 நோய்க்கெதிரான 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான 1வது மற்றும் 2வது சினோபார்ம் தடுப்பூசிகள் இனிவரும் காலங்களில் வாராவாரம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.30மணி முதல் மதியம் 1.00மணி வரை வழங்கப்படும் என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த மாதம் முதல் நாட்டில் வழமை நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்டுவதனால் அனைத்து தாய் சேய் நல செயற்பாடுகளும் வழமை போலவே செயற்படுத்தப்படும். பெரும்பாலான கர்ப்பவதிகளும் தாய்மார்களும் தடுப்பூசி ஏற்றியுள்ள நிலையில் கர்ப்பவதிகள் கிளினிக்குகள், அவர்களுக்கான அறிவூட்டும் நிகழ்வுகள் குழந்தைகளுக்கான நிறை பார்க்கும் செய்ற்பாடுகள் மற்றும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் அனைத்தும் வழமை போலவே இடம்பெறவுள்ளது.
அத்துடன் பாடசாலைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கபடவுள்ள நிலையில் 6ம் வகுப்பு பெண்பிள்ளைகளுக்கான கர்ப்பப்பை கழுத்து புற்று நோய்க்காக தடுப்பூசி மற்றும் 7ம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்குமான தொண்டைக்கரப்பான் ஏற்புவலி நோய்களுக்கான தடுப்பூசிகளும் கட்டம் கட்டமாக குறிப்பிட்ட பாடசாலைகளில் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படவுள்ளன. எனவே
மாணவர்களின் பெற்றோர்களையும் அனைத்து பொது மக்களையும் இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்