Fri. May 17th, 2024

பருத்தித்துறை எல்லே வீனஸ் அணி சம்பியன்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை வீனஸ் இளைஞர் கழக  அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

இதன் இறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை வீனஸ் இளைஞர் கழக  அணியை எதிர்த்து மனோன்மணி இளைஞர் கழக  அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மனோன்மணி  இளைஞர் கழக  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துகளில் 7 ஓட்டங்களைப் பெற்றனர்.  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வீனஸ் அணி 14 பந்துகளில் 8 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்