Mon. May 13th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – ஊழியர்களின் அசமந்த போக்கு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அசமந்தப்போக்கால் துர்நாற்றம் வீசுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளியேறும் வாயிலுக்கருகில் நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) நாய்யுடன் மோதியதில் நாய் இறந்துள்ளது. இறந்த நாயை அகற்றுமாறு பொது மகன் ஒருவர் உட்பட நோயாளர்களால் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் அசமந்த போக்கைக் காட்டியுள்ளனர். இதனால் இன்று வியாழக்கிழமை காலை வரை அகற்றப்படாமையால் பறவைகள் கொத்தி உணவு எடுத்ததுடன் துர்நாற்றமும் வீசியுள்ளது. வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல அசெளகரியங்களுக்கு மத்தியில் வருகைதருகின்றனர். குறித்த விடயத்தால் காலையில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மூக்கை மூடிய வண்ணம் செல்கின்றனர். குறித்த வைத்தியசாலை ஊழியர்களின் அசமந்தப்போக்கே இதற்கான காரணம் எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக வைத்தியசாலை நிர்வாத்தினர் கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்