Sun. May 19th, 2024

பருத்தித்துறையில் அயுர்வேதம் என்ற போர்வையில் சட்ட விரோத மேலைத்தேய சிகிச்சை நிலையம் முற்றுகை

பருத்தித்துறை நகர்ப் பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் மேலைத்தேய சிகிச்சையை சட்டவிரோதமாக நடாத்தி வந்த  சிகிச்சை நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை
மாவட்ட உணவு மருந்து பரிசோதகர், பொதுசுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை பொலிஸார் போன்றவர்களால் குறித்த ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தைப் பார்வையிட்ட போது பல அளவிலான  மேலைத்தேய மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இயங்கி வந்த ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில்  அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி காணப்பட்டதோடு மேலைத்தேய மருத்துவ சான்றுபெற்ற வைத்தியர் எவரும் இல்லாத நிலையில் ஆயுர்வத மருத்தவர் ஒருவரின் மனைவியால் சிகிச்சையளிக்கப்பட்டுக் கொண்டிருந்தமை தெரியவந்தது.
அங்கு அன்டிபயோட்டிக்  வகை மருந்துகள் பலவும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மேலைத்தேய மருந்துகளும், சிகிச்சை செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதன் போது அங்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தவர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுத்து தலைமறைவானதோடு மேலும் சட்டவிரோதமாக மருந்துகளை களஞ்சியப்படுத்தியிருக்கலாமென சந்தேகித்து அவர்களது வீட்டை பரிசோதிக் முற்பட்ட போது  அதற்கு  இடையூறும் விளைவித்துள்ளனர்.
இதனால் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தமை, மேலைத்தேய மருத்துவ தகுதிச் சான்றில்லாது மருந்துகளை வைத்திருந்தமை, மற்றும்  சிகிச்சைக்கு பயன்படுத்தியமை, மேலைத்தேய தகுதிவாய்ந்த மருத்துவரின்றி மேலைத்தேய மருத்துவ சிகிச்சை வழங்கியமை மற்றும் தூய்மையற்ற நியைில் நிலையத்தை விலங்குகளுடன் பேணியமை உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை எடுத்துள்னர். இந்த மருத்துவ நிலையம் கடந்த வாரம் பொது சுகாதார பரிசாதகர்களால் கோவிட் கட்டுப்பாட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்திய போதும் இந்த நிலை காணப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. அந்த வேளையில் தற்போதயை விட ஏராளமான அன்டிபயோட்டிக் மருந்துகள் இருந்தமை
அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் இந்த வைத்திய நிலையம் சில வருடங்களுக்கு முன்பும் இதே குற்றச் சாட்டுகளுக்காக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றால் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மன்றினால் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகுதியற்ற இவ்வாறான  சிகிச்சைகளால் பொதுமக்கள் குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தாம் செல்லும் வைத்திய முறையெது அதற்கு தகுதியான வைத்தியரா சிகிச்சையளிக்கிறார் என்பது பற்றி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும் எனவும்  சுாதார பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்