Thu. May 16th, 2024

நெல்லியடி மக்கள் வங்கி 7ம் திகதியே திறக்கப்படும்

நெல்லியடி மக்கள் வங்கி கிளை முன்னறிவித்தலின்றி மூடப்பட்டதால் மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்களின் தேவை கருதி அரசாங்கம் குறைந்தளவு ஊழியர்களுடன் வங்கிச் சேவையை நடாத்துமாறு பணித்துள்ளனர். ஆனால் மக்கள் வங்கி கிளைகள் எப்போது திறக்கப்படும்,  எப்போது மூடப்படும் என எந்தவித அறிவித்தலுமின்றி செயற்படுவதனால் மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாயுள்ளனர். நேற்று திங்கட்கிழமை நெல்லியடி மக்கள் வங்கி கிளை திறக்கப்பட்டது.
ஆனால் இன்றும் திறக்கப்படும் என பயணக் கட்டுப்பாட்டில் வீதிக் கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர் மற்றும் பொலீஸாரின் அனுமதியைப் பெற்று வங்கிக்கு வருகை தந்த போதிலும் வங்கி திறக்காததையிட்டு தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நெல்லியடி மக்கள் வங்கி கிளை முகாமையாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தமது தலைமைக் காரியாலயத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று நெல்லியடி கிளையும், நாளை வல்வெட்டித்துறை வங்கி கிளையும் நாளை மறுதினம் பருத்தித்துறை வங்கி கிளையும் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் பண வைப்பு மற்றும் மீளெடுத்தலுக்கான இயந்திர சேவையும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  ஆனால் பணம் மீளப் பெறுதல், வைப்பிலிடல் சேவைக்கு மேலதிகமாக அன்றாடம் கூலித் தொழிலாளர்கள் வருமானம் இன்றி, நகை அடகு வைத்து பணம் பெற்றாலே தொலைபேசி மூலம் அழைத்து தமது பொருட்களை ஒட்டுமொத்தமாக பெற்றுக் கொள்ள முடியும்.  சிறிய ஒரு பொருளுக்காக தமது சேவையை வழங்குவதில் வர்த்தகர்களும் பின் நிற்கிறார்கள்.  எனவே நெல்லியடியில் தனியார் வங்கிகள் தமது சேவையை தினமும் செய்யும் போது, அரச வங்கி திறக்கப்படமைக்கு அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்