Wed. May 15th, 2024

நல்லூர் பிரதேச சபை பாதீடு வெற்றி

மக்கள் நலன் பாதீட்டை முன்னணி இருவர் எதிர்த்த போதும் பாதீடு வெற்றி பெற்றதுடன், மக்கள் நலனுக்காக கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும் எனும் கருத்தையும் ஏற்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் பாதீடு வெற்றி பெற்றுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 13 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.  நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இன்று  புதிய தவிசாளர் மக்கள் முன்னணி கட்சி  மயூரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. மக்கள் நலன் கருதி சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டை அதே கட்சியை சேர்ந்த இரு
முன்னணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்த போதிலும் 13 வாக்குகளால் பாதீடு வெற்றி பெற்றுள்ளது. இதில் முன்னணி உறுப்பினர் வாசுகி சுதாகர்  வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த போது அதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வி.கே. குகானந்தன் எழுந்து இந்த சபையில்  2018 இருந்து நீங்கள் எந்தவிதமான மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை நீங்கள் ஆதரித்ததாக இல்லை. கடந்த காலங்களில் நீங்கள் பாதீடு திருத்தம் செய்து நீங்கள் எதிர்த்த வரலாறுகள் தான் உண்டு. நீங்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இந்த சபையில் இத்திட்டங்களை குழப்புவதற்காக தான் நீங்கள் இங்கு வருகை தந்து இருக்கிறீர்கள். நாங்கள் கட்சி பேதங்களை மறந்து இந்த மக்களுடைய நல்ல திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து தான் நாங்கள்  ஆதரிக்கின்றோம். தொடர்ந்தும் இந்த உறுப்பினரை கட்டுப்படுத்த முடியாவிட்டால் தவிசாளர் பதவி விலக வேண்டும் என்று ஆக்ரோஷமாக கூறினர். அதனைத் தொடர்ந்து தவிசாளரினால்  வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்  4 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும்,  ஐக்கிய தேசியக் கட்சி ஒருவரும்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
மணிவண்ணன் உறுப்பினர்கள் மூவரும், ரெலோ உறுப்பினர்  இருவரும்,  சுயேட்சை குழு (மாம்பழம்) இருவரும் என ஆதரவாக  13 பேரும். எதிராக முன்னணி உறுப்பினர்கள்  இருவரும், தமிழரசுக் கட்சி  3 மூவர் நடுநிலைமையும் . வரவு செலவுத்திட்டம் 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்