Sat. May 18th, 2024

செல்வச்சந்நிதி ஆலய கட்டுப்பாடுகள் வெளியீடு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத் திருவிழா தொடர்பான அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனை தொடர்பான கலந்துரையாடல் இன்று வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு, அலய அறங்காவலர் சபையினர், வல்வெட்டித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி,  கிராம அலுவலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலயத்திற்கு உள்நுளையும் அனைத்து சந்திகளிலும் பொலீஸ் காவல் வைக்கப்பட்டே திருவிழா நடைபெறவுள்ளது.
இதில் ஆலய பூசகர்கள், தொண்டர்கள், உபயகாரர்கள் உட்பட 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஆலயச் சூழல் தவிர்ந்த ஏனைய இடங்களில் இருந்து வருகை தருவோருக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காவடி, பாற்செம்பு உட்பட எந்த நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாராவது காவடி போன்ற நேர்த்திக் கடன்களை தீர்ப்பதற்கு அனுமதியை மீறி வருவார்களாயின் அவர்களை ஆலயத்தில் இருந்து நெடுந் தூரத்திலேயே வைத்து திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆலய பூசை நேரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, ஆலய வெளிச்சூழலில் சுவாமி வீதி உலா வருவதற்கோ அல்லது சமய நிகழ்வுகள் செய்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட பஸ் சேவை, அன்னதானம்,  தாக சாந்தி என்பவையும் இடம்பெற மாட்டாது. அத்துடன் ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்துச் செயற்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளைய தினம் ஆலயத்துடன் தொடர்புடைய பூசகர்கள்,  தொண்டர்கள்,  உபயகாரர்கள்,  நிரந்தர வர்த்தகர்கள் போன்றோருக்கு பிசிஆர் பரிசோதனை வல்வெட்டித்துறை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்