Sat. May 18th, 2024

சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டது

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சந்நிதியான் ஆச்சிரமம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அனுமதி பெறாமல் நடைபெற்ற வர்த்தக நிலையங்களும் அப்புறப்படுத்தி வைக்கப்பட்டது.

சந்நிதியான் ஆச்சிரமம் இரந்து உணவு வேண்டுவோருக்கு பார்சல் மூலம் உணவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் கட்டுப்பாடுகளை மீறி அடியவர்கள் பலரை ஒன்று கூட்டி ஆச்சிரமத்தில் உட்கார வைத்து உணவு பரிமாறப்பட்டது. இதனால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் இன்று செல்வச் சந்நிதி ஆலயத்தில் பூசகர்கள்,  தொண்டர்கள்,  மற்றும் வர்த்தகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் கலந்து கொள்ளாத வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கையையும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் சமூக இடைவெளிகளைப் பேணாது அருகருகில் இருத்தி வைத்து உணவழங்கப்பட்டமை, முகக் கவசம் அணியாமல் பலர் காணப்பட்டமை, உணவு பரிமாறுபவர்கள் ஏப்ரன், மற்றும் அதற்கான உடை எதுவும் அணியாமலும் என பல சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்