Fri. May 17th, 2024

கொவிட் 19 பரிசோதனை குறைப்பு

பிசிஆர் மற்றும் அன்ரியன் பரிசோதனைகளை மேற்கொள்வதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இனிவரும் காலங்களில் குறைத்தே வெளியிடப்படவுள்ளது.
வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் அன்ரியன் பரிசோதனைகளை குறைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் வீட்டில் தனிமைபடுத்தி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கான நோய் பரப்பும் காலத்தில் நோய்அறிகுறிகள் தென்படாவிடின் அவர்கள் அன்ரியனோ அல்லது பிசிஆர் பரிசோதனைகளோ மேற்கொள்ளப்படாமல் நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைத்து கணக்கிடப்படுவதுடன், தொற்றாளர்கள் மறைமுக நோயுடன் நடமாடுவுள்ளார்கள். எனவே அனைவரும் சமூக இடைவெளிகளைப் பேணி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதை சுயமாக ஒவ்வொரும் மேற்கொள்ள வேண்டும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்