Tue. May 21st, 2024

குளத்தினைப் பொழுதுபோக்கு மையமாக மாற்றும் பணி

ஓட்டுமடம் உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் ஓட்டுமடம் துரும்பை குளத்தினை தூர்வாரி பொதுபோக்கு மையமாக மாற்றும் பணி ஆரம்பித்து வருகின்றது.
சுமார் 50 வருட காலமாக தூர்வாரப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்த ஓட்டுமடம் துரும்பை குளத்தினையே தூர்வாரி பொழுது போக்கு மையமாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
குறித்த குளம் நீண்டகாலமாக பாதுகாக்காமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டமையால் குப்பைகள் மற்றும் விலங்கு இறைச்சிக் கழிவுகளை  வீசுகின்ற  இடமாக மாறியிருந்தது. குறித்த குளத்தை தூர் வாரி பொழுது போக்கு மையமாக மாற்றித் தருமாறு அப்பிரதேச மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டநிலையிலேயே    இப்பணி இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகராட்சி முதல்வர்  சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்திபன், நிபாகிர், நியாஸ் ஓட்டுமடம் உதவுங்கரங்கள் அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் திரு ஓங்காரமூர்த்தி, சமூக செயற்பாட்டாளர் யெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்