Fri. May 17th, 2024

கட்டுவன பிரதேச சபைக்கு ஜனாதிபதி விஜயம்

கட்டுவன பிரதேச சபைக்கு புதிய கட்டடம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கட்டுவன பிரதேச சபைக்கு விஜயம் செய்து நிலைமையைப் பார்வையிட்டார். கட்டுவனவில் உள்ள பிரதேச சபை பிரதான கட்டிடத்தின் குறைபாடுகள் காரணமாக சபையின் நாளாந்தச் சேவைகள் மித்தெனிய நகரில் உள்ள உப அலுவலக கட்டிடத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இடவசதி போதாமையால் சபை கூட்டங்களின் போதும் சேவைகளை வழங்கும் போதும் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி  கேட்டறிந்து புதிய கட்டிடமொன்றை அமைத்துத் தருவதற்கு இணக்கமும் தெரிவித்துள்ளார். மித்தெனிய குளத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் “ரணவிரு உயன“ சிறுவர் விளையாட்டரங்கு மற்றும் நடை பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை என்பவற்றையும் மக்களிடம் இன்று நான் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. சங்கைக்குரிய முருங்காகஸ்யாயே ஞானிஸ்ஸர நாயக்க தேரர் மன்றத்தினால் இதற்கான அனுசரணை வழங்கப்பட்டுள்ளது. மித்தெனிய பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கும் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கும் உடனடித் தீர்வை வழங்குவதற்கும்,
மித்தெனிய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கும் – அது தொடர்பான அமைச்சர்களுக்கு நான் பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.  அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் மித்தெனிய பிரதேச சபையின் தலைவர் மஹீன் கமாச்சி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்