Tue. May 21st, 2024

கடுமையான கண்காணிப்பில் காவடி நேர்த்தி

கரவெட்டி சுகாதார பிரிவினரின் கடுமையான கண்காணிப்பில் காவடி நேர்த்தி செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று நடைபெற்றது.
வல்லிபுர ஆலயத்தில் இருந்து காவடி நேர்த்தி ஆரம்பிக்கப்பட்டு ஏராளமான எண்ணிக்கை கொண்ட பக்தர்களுடன் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது வீதிகளில் ஒன்று கூடி காவடி எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காவடி வல்லிபுர கோயிலில் இருந்து ஆரம்பமாகி கடற்கரை வீதியூடாக சந்நிதி ஆலயத்திற்கு சென்று,  உடுப்பிட்டி,  வல்லை ஊடாக பிரதான வீதிகளில் பயணம் செய்து காட்டுப்புலம் பகுதியில் உள்ள கோயிலில் நிறைவடைந்துள்ளது.  இது தொடர்பாக கரவெட்டி வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் தலைமையிலான குழுவினர், மற்றும் நெல்லியடி பொலீஸார்  விரைந்து செயற்பட்டு சுகாதார முறைப்படி செயற்படாமல் காவடியில் கலந்து கொண்டவர்களை அங்கிருந்து அகற்றப்பட்டதோடு, நேர்த்திக்காக எடுக்கப்பட்ட காவடியை சுகாதார பிரிவினரின் முழுமையான கண்காணிப்புக்கு மத்தியில் முடிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் மாதங்கள் பலவற்றில் கோயில் நிகழ்வுகள் அதிகளிவில் நடைபெறவுள்ளது. தற்போது வடமராட்சி பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிகை அதிகரித்து வரும் நிகழ்வில் அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய பெருமளவிலான எண்ணிகை கொண்டோர் கோயில் நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதிலும் அவர்களில் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதே செயற்படுவது அவர்களின் அசமந்தப் போக்கை வெளிக்காட்டுகிறது. இது தொடருமானால் வடமராட்சி பகுதியே முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்