Fri. May 17th, 2024

ஒலிம்பிக் பதக்கத்தை தானே அணிந்த சீனா வீராங்கனை, சாதனை பதிவு

ஒலிம்பிக் போட்டியில் முதலாவது தங்கத்தை தாமே அணிந்து வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார் சீன வீராங்கனை யாங் குயான்.
கொரோனா அச்சம் காரணமாக போட்டியில் வெல்லும் வீராங்கனைகள் தமக்குரிய பதக்கத்தை தாமே அணிதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி
முதல் தங்கப்பதக்கத்தை மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் சீனா வீராங்கனை யாங் குயான் வென்று தனது பதக்கத்தை தானே அணிந்த முதல் ஒலிம்பிக் வீராங்கனை எனும் சாதனையை பதிவு செய்துள்ளார் .
இதன்படி மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் குயான் தங்கப் பதக்கத்தையும் ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதே பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனையான தெஹானி எகொடவெல முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். இதில் இவர் 49 ஆவது இடத்தையேப் பெற்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்