Fri. Jun 14th, 2024

எறிபந்தாட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

கல்வி அமைச்சும் இலங்கை பாடசாலை எறிபந்து சம்மேளனமும் இணைந்து நடத்தும் போட்டிகளுக்கான நடுவர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எழுத்து மற்றும் நடைமுறைப் பரீட்சையை இம்மாதம் 24ஆம் திகதி அஹலியகொட தர்மபால வித்தியாலயத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்க பாடசாலையில்  நிரந்தரமாகப் பணிபுரியும் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். வடமாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள்  இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர்களான க.கனகராஜா,  ந.செந்தூரன் ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்