Fri. May 17th, 2024

வடமாகாண வொலிபோல் யாழ் கல்வி வலய பாடசாலைகள் சம்பியன்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான வொலிபோல் போட்டியில் யாழ் கல்வி வலயப் பாடசாலைகளான புத்தூர் சோமஸ்கந்தா மற்றும் ஆவரங்கால் மகாஜன வித்தியாலய அணிகள் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான வொலிபோல் போட்டி இன்று  புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில்  புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணியை எதிர்த்து மன்னார் துள்ளுக்குடியிருப்பு வித்தியாலய அணி மோதியது. முதலாவது செற்றில் மன்னார் துள்ளுக்குடியிருப்பு வித்தியாலய அணி பலத்த போராட்டத்தில் 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:14, 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பெற்றது.
18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மகாஜன வித்தியாலய அணியை எதிர்த்து மன்னார் கருங்கண்டல் றோ.க.த.பாடசாலை அணி மோதியது. இதிலும் முதலாவது செற்றில் மன்னார் கருங்கண்டல் றோ.க.த.பாடசாலை அணி 26:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆவரங்கால் மகாஜன வித்தியாலய அணி 24:14, 25:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. 3ம் இடத்தை மன்னார் அல்மினா பாடசாலை அணி பெற்றது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில்  புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலை அணி மோதியது. முதலாவது செற்றில் மடுகந்தை தேசிய பாடசாலை அணி பலத்த போராட்டத்தில் 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:18, 25:21என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை மன்னார் பற்றிமா பாடசாலை அணி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்