Tue. May 14th, 2024

ஆற்று நீரில் வீதி அபிவிருத்தி மக்கள் விசனம்

மண்டான் பகுதியில் உள்ள ஆற்று நீரை வீதி அபிவிருத்தி வேலையில் ஈடுபடும் நிறுவனத்தினர் பயன்படுத்துவதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பயணத் தடை நேரத்தில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவதனால் தம்மால் தடுப்பதற்குரிய வழிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மண்டான் வீதி மாகா கம்பனியினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகிறன்றது. இதற்கான நீரை மண்டான் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து பெற்றுக் கொள்கின்றார்கள். இவ்வாற்றில் சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பல லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டது. இவை பெருகுவதற்காக சிறிது காலம் அப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதைக் கருத்தில் கொள்ளாது வீதி அபிவிருத்தி வேலையில் ஈடுபடும் நிறுவனத்தினர் தொடர்தும் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.  இது தொடர்பாக கரவெட்டி பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவராலும் தடை விதிக்கப்பட்ட போதிலும் பயணத் தடையில் உள்ள போது தொடர்ந்தும் அவர்கள் தண்ணீர் எடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தமது வாழ்வாதரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்