Sun. May 12th, 2024

அவசர புற்றுநோய் மருந்துகளை வாங்க 100 கோடி ரூபாவை ஒதுக்கிய திறைசேரி

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இலங்கையின் முதன்மையான மருத்துவமனையான மகரகம அபேக்ஷா மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்வதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சுக்கு உடனடியாக ரூ .1,00 கோடி ரூபா பணத்தை விடுவிக்க திறைசேரி ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த ஆறு மாதமாக மாரகம வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகளால் புற்றுநோய்க்கான வைத்திய சேவைகள் தடைப்பட்டிருக்கின்றது தடைபட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் அமைச்சக செயலாளர் பி.எம்.எஸ். சார்லஸ் ஆகியோர் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த பணம் உடனடியாக அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு செய்வதற்காக விடுவிக்கப்படுள்ளது

புற்றுநோய் நோயாளிகள் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளை வாங்குவதற்காக அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (எஸ்.பி.சி) வழியாக இந்த வாரம் திறந்த டெண்டர்களை அமைச்சு கோரவுள்ளது என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்