Sat. Jun 1st, 2024

அடுத்த மரணமும் பதிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று (29) கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை மூன்றாக உயர்வடைந்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். வடமராட்சி நெல்லியடி நாவலர்மடம் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று காலை புலோலி மத்தியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் மற்றும் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்