வேன் – டிப்பர் மோதி கோர விபத்து!! -2 பெண்கள் உட்பட மூவர் சாவு-

தம்புள்ளை ஹபரண வீதியின் குடாகஸ்வெவ என்னும் இடத்தில் நடந்த விபத்துச் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவ்விபத்துச் சம்பவத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாவகும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.