Fri. Apr 26th, 2024

பொய்யான ஆவணங்கள் சமர்பித்தா கோத்தபாய இலங்கை கடவுசீட்டை பெற்றார் ?

கோத்தபாய ராஜபக்ச தற்போது இலங்கை குடிமகனுக்கு மாத்திரம் வழங்கப்படக்கூடிய கடவுசீட்டை வைத்திருப்பதாகவும், இதை தான் கடந்த மே மாதமே பெற்றுக்கொண்டதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் இன்னமும் அமெரிக்கா குடிவரவு திணைக்களம் கோத்தபாயவின் குடியுரிமையை விலக்கியமைக்கான அத்தாட்சி பாத்திரத்தை வழங்கவில்லை என்றும், அவரது பெயர் இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலும் வெளிவந்த குடியுரிமை நீக்கியவர்களின் பெயர்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச இலங்கை கடவுசீட்டு பெறுவதற்கு சமர்ப்பித்த ஆவணம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரஜைக்கான கடவுசீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது சமர்ப்பிக்க வேண்டிய அமெரிக்க குடியுரிமை நீக்கியதற்கான ஆவணமாக கோத்தபாய எதை சமர்ப்பித்தார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படியாயின் அவர் பொய்யான ஆவணத்தை தயார் செய்து சமர்பித்தாரா என்பதே. அப்படி அவர் பொய்யான ஆவணத்தை சமர்பித்திருப்பின் குடிவரவு திணைக்களம் அந்த ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து அமெரிக்க தூதுவராலயத்தில் விசாரித்தார்களா என்பதே. இதனால தான் கோத்தபாய , ரணில் விக்கரமசிங்கவின் உதவியை நாடி, இந்த கடவு சீட்டை பெற்றுக்கொண்டுள்ளார். ஆகவே கோத்தபாய ராஜபக்ச ஒன்றில் பொய்யான ஆவணத்தை தயார் செய்தோ அல்லது தேவையான ஆவணங்களை சமர்பிக்காமலோ இலங்கை கடவுசீட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதை ஒரு சாதாரண குடிமகன் செய்திருந்தால் அவர் இப்பொழுது கம்பி எண்ணி கொண்டிருப்பார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்