விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு அனுமதி
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 18ம் திகதி தற்போது நிலவும் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை பிற்போடுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை வருடாந்த விளையாட்டு வைபவங்கள், போட்டிகள் உட்படலாக திறந்தவெளிச் செயற்பாடுகளை திட்டமிடப்பட்டவாறு நடாத்திச் செல்வதற்கு அதிபர்களிடமிருந்து அதிகளவிலான கோரிக்கைகள் கிடைக்கப்பெறுகின்றன.
ஆகையால் வளிமண்டலவியல் திணைக்களத்திடம் வினவியதற்கு அமைய அவர்களால் அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குரியதாக வழங்கப்பட்ட காலநிலை அறிக்கையின்படி தங்களது விசேட கவனத்தை செலுத்துகின்றேன்.
அடுத்து வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக,
அவ்வாறே நாட்டின் பல பிரதேசங்களிலும், கவனத்தில் கொள்ளவேண்டிய மட்டத்தில் மனித உடல் உணரக்கூடிய மட்டத்தில் வெப்பநிலை நிலவும் என்பதாக, நாடளாவிய ரீதியில் பொதுவான தீர்மானம் ஒன்றை எடுப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால், கல்வி அமைச்சின் இலக்கம் அதற்கமைய உரிய திறந்த வெளிச் செயற்பாடுகளை நடாத்தும் போது அதிபர்கள் பொருத்தமான விதத்தில் தீர்மானித்து மாணவர்களது சுகாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்பு கருதி விசேட கவனம் செலுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் வலியுறுந்துகின்றேன். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.